“ஒளிப்பதிவு திருத்தச்சட்டத்தின் விளைவுகள் மோசமாக இருக்கும்”: கமல் ஹாசன்

ஒளிப்பதிவு திருத்தச்சட்டத்தின் விளைவுகள் மோசமாக இருக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக, தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க தொழிலாளர்களுக்கு, நிவாரண…

ஒளிப்பதிவு திருத்தச்சட்டத்தின் விளைவுகள் மோசமாக இருக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக, தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க தொழிலாளர்களுக்கு, நிவாரண பொருட்களை மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எமெர்ஜென்சி காலத்திலேயே ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தை கொண்டு வர முயற்சிகள் நடந்தன என்றும், அப்போதைபோலவே, தற்போதும் இச்சட்டத்தின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், விஸ்வரூபம் திரைப்படத்தையும் தடை செய்ய முடியும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.