தனியார் பள்ளியில் சேர்பது போல, குன்றத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்ப படிவங்களை பெற்றுசென்றனர்.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் இன்று முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும், மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால், 8-ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் டிசி இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பின்னர் அந்த மாணவர்கள் முந்தைய பள்ளிகளிடம் டிசி பெற்று அதைச் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இது தவிர, RTE சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குன்றத்தூர் நகராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்களது பெண் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வமுடன் அந்த பள்ளியை நோக்கி வருகின்றனர். குறிப்பாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை இயங்கும் இந்த பள்ளியில் குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பெற்றோர் தங்களது பெண் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்க்க காலை முதலில் விண்ணப்பப் படிவங்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்ப படிவங்களை வாங்கி செல்கின்றனர்.
அண்மைச் செய்தி: ‘அரசியல் என்பது வியாபாரம் அல்ல: நடிகர் கமல் ஹாசன்’
குறிப்பாக கடந்த கல்வியாண்டில் 2065 மாணவிகள் பயின்று இந்த பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் இதைவிட கூடுதலாக மாணவிகள் சேர்க்கை இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரசுப்பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சியை பார்க்கும் போது தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பது போல் இருந்தது என பலரும் கத்து தெரிவித்துவருகின்றனர். மேலும், தனியார் பள்ளிகளில் பயின்ற தங்களது பிள்ளைகளை பெற்றோர் இந்த அரசு பள்ளியில் சேர்க்க, விண்ணப்பம் வாங்கி செல்வது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








