முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கன் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் – ஐநா எச்சரிக்கை

அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக ஆப்கனிலிருந்து அடுத்த நான்கு மாதங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறலாம் என ஐநா தெரிவித்துள்ளது.

ஆப்கனை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 4 மாதங்களில் ஏறத்தாழ 5 லட்சம் ஆப்கனியர்கள் அகதிகளாக வெளியேறலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.

தற்போது பெரிய அளவிலான இடப்பெயர்வுகள் நிகழவில்லை. ஆனால் இந்த அரசியல் நிச்சயமற்ற சூழல் மேலும் நீடிக்குமானால் ஆப்கனிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்மட்ட குழு துணை ஆணையர் கெல்லி தெரிவித்துள்ளார்.

அதேபோல நட்பு நாடுகள் ஆப்கனிலிருந்து வரும் அகதிகளுக்கு தங்கள் நாடுகளில் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில் ஆப்கன் அகதிகளுக்கு உணவு வழங்க ஐக்கிய நாடுகள் 12மில்லியன் டாலர் உதவி தொகை வழங்க வேண்டும் என உலக உணவு திட்டம் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

நிச்சயமற்ற அரசியல் சூழல், வேலையிண்மை, பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகியவை ஆப்கன் மக்களை அந்நாட்டிலிருந்து வெளியேற உந்துகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கில் மக்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே காத்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

Gayathri Venkatesan

அதே அலுவலகம்… அன்று தூய்மை பணியாளர்; இன்று பஞ்சாயத்து தலைவர்!

Jayapriya

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

Saravana Kumar