முக்கியச் செய்திகள் தமிழகம்

பாலம் விபத்திற்கு ஒப்பந்ததாரரின் கவனக்குறைவே காரணம் – அமைச்சர்

மதுரை பாலம் விபத்திற்கு ஒப்பந்ததாரரின் கவனக்குறைவே காரணம் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7.3 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.663 கோடி செலவில் புதிய பறக்கும் பாலம் கட்டுமான பணி கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தில் 40 சதவீத வேலைகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஐயர் பங்களா அருகே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத் தக்க ஆகாஷ் சிங் எனும் வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் பாலம் பல பிரிவுகளாக இடைவெளி விட்டு கட்டப்பட்டு வருகிறது. பாலம் அனைத்தையும் ஒன்றாக இணைக்க இரும்பு தூண்களுக்கு இடையே ஹைட்ராலிக் ஆயில் பிரஷர் கொண்ட இணைப்பு வழங்கப்பட்டு பாலத்தைத் தாங்கி வந்துள்ளது தற்போது அந்த ஹைட்ராலிக் ஆயில் பிரஷர் கொண்ட இணைப்பு எதிர்பாராத விதமாகத் துண்டிக்கப்பட்டது. இதனால் விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல் கட்டமாக அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் இரண்டாவது நாளாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர் . செய்தியாளர்களை பேட்டியளித்த அமைச்சர் ஏ.வ.வேலு

“விபத்து தவிர்க்கப்பட வேண்டியது, ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்துள்ளது. 3 ஆண்டு காலமாக இந்த கட்டுமான பணி நடைபெறுகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. பாலம் இணைப்பு பணியின் போது ஹெரிடரை இணைக்கும் போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. 160டன் ஹெரிடரை தூக்கி நிறுத்த 200டன் ஹைட்ராலிக்கு பதிலாக குறைவாக பயன்படுத்தபட்டது என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். இது சாகர்மாலா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டம் ஆகும். முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே விபத்து காரணம்.” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “பணி நடைபெற்ற இடத்தில் மேற்பார்வை பொறியாளர் இருப்பதற்கு பதிலாக தொழிலாளர் மட்டுமே இருந்துள்ளார். சரியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத நிலையில் பணிகள் நடைபெற்றுள்ளது. ஹைட்ராலிக் ஜாக் தன்மை குறித்து விசாரணை நடத்தி ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். என்ஐடி தொழில்நுட்ப நிபுணரான திருச்சி பாஸ்கர் தலைமையிலான குழு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம். விபத்தில் உயிரிழந்தவருக்கு நிதியுதவி அளிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். அவர்களுடைய கண்ணோட்டத்தில் விசாரணை அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர். விசாரணை குழுவானது விபத்தை தொடர்ந்து பாலத்தின் பணிகளை முழுமையாக ஆய்வுசெய்யும். ஆய்வு அறிக்கையை பொறுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு அமைந்த பின் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ய அரசு சார்பில் தர பரிசோதனை குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பியதோடு, ஒப்பந்தங்களையும் ரத்து செய்து நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இனி நடைபெறும் பாலம் , சாலை பணிகள் நடைபெறும் பகுதிகளில் LOG ஷீட் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
திட்ட பணிகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பணிகளை தொடர்வோம்.” என கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மமதா பானர்ஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ள பிஜேபி

Saravana Kumar

”மக்கள் நீதி மய்யத்தில் யாரும் எம்எல்ஏ ஆகப்போதில்லை”- கார்த்தி சிதம்பரம்!

Jayapriya

சக வேட்பாளர்களுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் மடல்

Saravana Kumar