முக்கியச் செய்திகள் உலகம்

அழிந்துவரும் மலை ‘போங்கோ மறிமான்’ இனத்தில் புதிய வரவு

உலகில் அழிந்துவரும் அரிய விலங்கினமாக கருதப்படும் மலை போங்கோ வகை மறிமான் இனத்தில் புதிதாக இரு குட்டிகள் பிறந்துள்ளன.

தப்பி பிழைத்தது வாழும் என்ற உயிரியலாளர் டார்வின் தத்துவத்தின் படி, இவ்வுலகில் எண்ணற்ற உயிரினங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. சமகாலத்தில் அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களை காப்பாற்றவும், சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உயிரின ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்..

அப்படி, அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய வகை உயிரினமாக அறிவிக்கப்பட்டது தான் மலை போங்கோ வகை மறிமான் இனம். தற்போது வரை உலகம் முழுவதும் முழுமையாக வளர்ச்சியடைந்த 80 மலை போங்கோ வகை மறிமான்கள் மட்டுமே உயிர்வாழ்கின்றன.

இந்த நிலையில் தான், போலந்து தலைநகர் வார்சாவிலுள்ள உயிரியல் பூங்காவில், கடந்த 3 மாதங்களில் இரண்டு போங்கோ வகை மறிமான் குட்டிகள் பிறந்து வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

கடந்த 15-ம் தேதி ஒரு ஆண் குட்டியும், கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண் குட்டியும் பிறந்துள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இரு குட்டிகளும் இருவேறு கூண்டுகளுக்குள் வைத்து பராமரிக்கப்பட்டும் நிலையில், இரண்டும் ஒன்றுடன் ஒன்று அன்பை பறிமாறிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement:

Related posts

கொரோனா 3வது அலை வராது என்று நாம் கூற முடியாது; துணைநிலை ஆளுநர் தமிழிசை

Ezhilarasan

சபாநாயகர் ஆகிறார் அப்பாவு!

Halley karthi

கர்ணன் திரைப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்

Gayathri Venkatesan