முக்கியச் செய்திகள் தமிழகம்

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு தலைவர் நியமனம்!

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு தலைவரை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் நல ஆணையம், தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், அந்தப் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்திற்கு பொன் குமாரை தலைவராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் நல ஆணையர், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர், வீட்டு வசதித் துறைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட எட்டு நபர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:

Related posts

இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது: புதிதாக 31,443 மட்டும் பாதிப்பு

Vandhana

விவசாயிகள் யார் வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ளலாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் ருக்மணி விஜயகுமாரின் யோகா வீடியோ!

Jeba Arul Robinson