ஐந்து மாத குழந்தையை 36 மணிநேரத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல்துறையினர் மீட்டனர்.
நெல்லை மாவட்டம், கீழ பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள் இவர் தனது 5 மாத
குழந்தையை கடந்த 20ம் தேதி பாப்பாக்குடி காவல் நிலையத்தில் குழந்தையை காணவில்லை என்று புகார் தெரிவித்ததின் பெயரில் நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தீவிரத் தேடுதலில் ஈடுபட்டுவந்த அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் மற்றும்
தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்
குழந்தை காணாமல் போன 36 மணி நேரத்தில் குழந்தையை தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் குழந்தையைக் கண்டு பிடித்தனர்.
இந்நிலையில், குழந்தைக் கடத்தலில் ஈடுபட்ட கனியம்மாள் முத்துச்செல்வி மற்றும்
ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய மூன்று பேரை அம்பாசமுத்திரம்
காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்தக் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உண்டா என்று மேல் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெற்றோர் குழந்தைகளை பத்திரமாக வளர்க்க வேண்டும். வீட்டிற்கு வரும் விருந்தினர், அக்கம்பக்கத்தினர் என யாருடனும் தேவை இல்லாமல் குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டாம். தங்கள் குழந்தைகளை பெற்றோர் தான் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்” என்றார்.
-மணிகண்டன்