மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பிய நபரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று காலை 11 மணிக்கு மதுரை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது விமான நிலைய வளாகத்தில், எடப்பாடி பழனிசாமியுடன் பேருந்தில் பயணித்த ஒரு நபர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி, தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பிற்காக காவலர்கள் அந்த நபரை தடுத்தனர்.
இதனையும் படியுங்கள்: பிரம்மாண்டமாக நடைபெற்ற நியூஸ்7 தமிழின் கோயில் விருதுகள்-2023
அதன் பின்னார் அவர் யார் என விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் சிங்கப்புணரியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– யாழன்







