ராஜா கைய வச்சா ராங்கா போனதில்ல; இணையத்தை கலக்கும் ”காட்டு மல்லி” பாடல்

விடுதலை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்டு மல்லி பாடல் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’யை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன்…

விடுதலை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்டு மல்லி பாடல் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’யை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த, கதை முழுமையாகச் சினிமா ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று வெற்றி மாறன் விரும்பியதால் 2 பாகங்களாக இப்படத்தை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பல புதிய படங்களைத் தயாரித்தும், வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில் இந்த பாடத்தையும் இன்போடைமெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வழங்குகிறது.

சத்தியமங்கலம், ஈரோடு உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலை படப்பிடிப்பு நடத்தப்பட்டது. வழக்கமாகக் காமெடியனாக நடிக்கும் சூரி, இந்தப் படத்தில் போலீசாகவும், கைதியாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.

விடுதலை முதல் பாகத்திற்கான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளிலும் ஈடுபட்டு வரும் படக்குழு கடந்த 8-ம் விடுதலை திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தி முடித்தது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், விடுதலை படத்தில் இடம் பெற்றுள்ள காட்டு மல்லி பாடல் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இளையராஜா இசையில் வெளிவந்த இந்த படத்தின் இரண்டாவது பாடலாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு யூடியூப்பில் இந்தப் பாடல் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இணையத்தில் பல பிரபலங்கள் காட்டு மல்லி பாடல் குறித்து தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருவதோடு, இசையமைப்பாளர் இளையராஜாவைப் புகழ்ந்து என்றும் ராஜா ராஜாதான் எனவும், ஈ எனவும் பதிவிட்டு வருகிறனர்.

இளையராஜா எழுதி பாடியுள்ள இப்பாடல் அனன்யாவின் இனிமையான குரலில் பாடல் மிகச் சிறந்த மெலோடியாக அமைந்துள்ளது. அத்துடன் பாடல் வரிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.