திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், தமிழக அரசால் அரசுடைமையாக்கப்பட்டன.
உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள், தமிழக அரசால் அரசுடைமை ஆக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது, திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளை மற்றும் கீழகாவாதுகுடி கிராமத்தில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான 50 ஏக்கர் சொத்துக்கள், இன்று பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.







