தேனியில் பணிபுரிந்த கடையில் சிசிடிவி இருப்பது தெரியாமல் பூட்டை உடைத்து
பீரோவில் இருந்த பணத்தை திருடி மாட்டிகொண்ட ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி அருகில் உள்ள ரத்தினம் நகரில் பி.ஜி.பெஸ்ட் என்ற பெயரில் நிறுவனத்தை
நடத்தி வருகிறார் தினேஷ். இவரது நிறுவனத்தில் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த முகமது
சல்மான் என்ற ஊழியர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தினேஷ் கம்பெனி
பணத்தை அங்குள்ள பீரோவில் வைத்து நிறுவனத்தை மூடிவிட்டு இரவு வீட்டுக்குச்
சென்றுவிட்டார். மறுநாள் நிறுவனத்தை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கபட்டு பீரோவில் இருந்த பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிக்க: ’தி எலிபெண்ட் விஸ்பரெர்ஸ்’க்கு ஆஸ்கர் விருது – தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை என அமைச்சர் மதிவேந்தன் பேட்டி!
இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார். இதையடுத்து
காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது நிறுவனத்தில் பொருத்தபட்ட சிசிடிவி
கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, கடை ஊழியர் முகமது சல்மான் இரவில்
கடைக்குள் நுழைந்து அங்கு பீரோவில் வைக்கபட்டிருந்த பணத்தை திருடிச் சென்று
இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் முகம்மது சல்மானை கைது
செய்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
-ம.பவித்ரா








