புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை விசாரிப்பதற்காக குவிந்த காவல்துறை – தொண்டர்கள் சாலை மறியல்!

புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை விசாரிப்பதற்காக காவல்துறையினர் குவிந்த ந்லையில் அக்கட்சித் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தியை ஆட்கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரிக்க பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள ஜெகன் மூர்த்தியின் வீட்டில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீசார் அத்துமீறி அவரை கைது செய்ததாக கூறி ஜெகன் மூர்த்தியின் வீட்டின் வாயிலில் சுமார் 500க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் குவிந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் உடனடியாக போலீசார் அங்கிருந்து வெளியேற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்கள் கோஷமிட்டு வந்த நிலையில்,  புரட்சி பாரத கட்சியினருடன் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியது. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியின் மனைவி யமுனா மற்றும் அவரின் மகள்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். சுமார் 5 மணி நேரமாக போராடி தற்போது விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்குள் காவல்துறை சென்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.