பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“அன்புமணி ராமதாஸ்க்கு சென்னையில் உள்ள கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து இன்று அவர் வீடு திரும்பினார். தற்போது அவர் நலமுடன் உள்ளார். அடுத்த 2 வாரங்களுக்கு உடலியக்கப் பயிற்சி (பிசியோதெரபி) மேற்கொண்டு ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




