“அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்” – நயினார் நாகேந்திரன்!

ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் நிறைந்திட அன்னை பராசக்தியின் அருள் துணை நிற்கட்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அறிவையும் ஞானத்தையும் அருளும் அன்னை சரஸ்வதி தேவியைப் போற்றி வணங்கும் இந்த இனிய சரஸ்வதி பூஜை திருநாளில், அனைவரின் வாழ்விலும் கல்வி, அறிவு, ஆற்றல் மற்றும் வெற்றி பெருகிட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளையும், நமது உழைப்பிற்குத் துணை நிற்கும் ஆயுதங்களையும் போற்றி வணங்கும் ஆயுத பூஜை திருநாளில், தொழில் வளம் பெருகி, உழைப்பிற்கேற்ற உயர்வும் வெற்றியும் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் நிறைந்திட அன்னை பராசக்தியின் அருள் துணை நிற்கட்டும்.

அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.