முக்கியச் செய்திகள் இந்தியா

“நாட்டின் சொத்துக்களை பிரதமர் விற்றுவிட்டார்”-ராகுல்காந்தி

நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்றுவிட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி,

அரசு சொத்துக்களை குத்தகை விடும் மத்திய அரசின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்று விட்டதாகவும், 70 ஆண்டுகளாக இந்திய சேர்த்த சொத்துக்களை 7 ஆண்டுகளில் பிரதமர் மோடி விற்றுவிட்டார் என்றும் விமர்சித்துள்ளார். பா.ஜ.க அரசுக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துக்களை பரிசாக பிரதமர் நரேந்திர மோடி அளிக்கிறார் என்றும், 42,000 கிலோமீட்டர் நீளமுள்ள மின் வழித்தடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதலில் வேலை வாய்ப்புகளை பிரதமர் பறித்தார், அடுத்து பணமதிப்பிழப்பை அறிவித்தார், தற்பொழுது நாட்டின் சொத்துக்களை விற்று வருகிறார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான பல ஆயிரம் செல்போன் கோபுரங்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பொதுச்சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் பொதுசொத்துக்கள் அனைத்தையும் மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது.” என்றும்

“பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 25 விமான நிலையங்களை தனியாருக்கு விற்க முடிவு செய்து விட்டது. உணவு தானிய கிடங்கு களையும் தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.” என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

நிதிநிலை சட்டமுன் வடிவை அறிமுகம் செய்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்

Gayathri Venkatesan

ஐதராபாத்தை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா!

Saravana Kumar

வைரலாகும் ‘குக் வித் கோமாளி’ புகழின் புதிய கார்

Jeba Arul Robinson