மோடி பிரதமரான பிறகே இந்தியாவிற்கென்று சுதந்திரமான பாதுகாப்பு கொள்கை வகுக்கப்பட்டது – அமித்ஷா

மோடி பிரதமரான பின்னரே இந்தியாவுக்கு என்று தனியான சுதந்திரமான பாதுகாப்பு கொள்கை வகுக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்பு படையின் ரஸ்டம்ஜி நினைவு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்…

மோடி பிரதமரான பின்னரே இந்தியாவுக்கு என்று தனியான சுதந்திரமான பாதுகாப்பு கொள்கை வகுக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

எல்லை பாதுகாப்பு படையின் ரஸ்டம்ஜி நினைவு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு, பணியில் இருக்கும் போது உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும், சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கும் விருதுகளை வழங்கினார்.

பின்னர் வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அமித் ஷா, நரேந்திர மோடி பிரதமராகும் வரை, இந்தியாவுக்கென்று பாதுகாப்பு கொள்கைகள் இருக்கிறதா என்று பல நாட்கள் சிந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் மோடி பிரதமரான பின்னரே இந்தியாவுக்கென்று சுதந்திரமான பாதுகாப்பு கொள்கைகள் வகுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அதற்கு முன்னர் வரை வெளியுறவுக் கொள்கையோ அல்லது வெளியுறவு கொள்கையோடு ஒன்றிணைந்த பாதுகாப்பு கொள்கையுமே இருந்து வந்ததாக கூறினார்.

மேலும் அண்டை நாடுகளுடன் அமைதியான உறவை பேணுவதே நமது கொள்கையாக இருந்தாலும், நமது எல்லையில் சிலர் அத்துமீறினாலோ, நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுத்தாலோ அதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தெரிவித்தார். இதற்காகவே சுதந்திரமான பாதுகாப்பு கொள்கையும், சட்டமும் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த பாதுகாப்பு கொள்கை இல்லாமல் நாம் வளர்ச்சி பாதைக்கு செல்ல முடியாது, இந்த பாதுகாப்பு கொள்கையே ஜனநாயகத்தை வாழ வைக்கிறது என்றும் அமித்ஷா குறிப்பிட்டார்.

மேலும் இந்தியாவின் எல்லை பகுதியில் 3 சதவீதம் வேலியிடப்படாமல், தீவிரவாதிகள் நுழைவதற்கும், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதற்கும் வாய்ப்பளிக்கும் விதமாக இருந்ததாக கூறிய அமித் ஷா அடுத்த ஆண்டிற்குள் இந்தியாவின் எல்லைகள் முழுமையாக வேலியிடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கபப்டும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.