தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தமிழர்களின் மரபுக்கு புகழ் சேர்க்கும் திருநாள் இது. இதனை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்’ என வாழ்த்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழக முதல்வர் பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில், ‘நம் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களால் அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திடவும், உலக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவிடவும் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் நல்வாழ்த்துகளை பேரன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டில், ‘அனைவருக்கும் தைப்பொங்கல் – தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்; கழக அரசு அமைந்ததும், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தினர் நலம்காக்க விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி உறுதி என்ற உவப்பான செய்தியுடன் எனது வாழ்த்தை உரித்தாக்குகிறேன்; இருள் விலகி ஒளி பாயட்டும்’ என பதிவிட்டுள்ளார்.