தமிழர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் பொங்கல் வாழ்த்து!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வணக்கம் என தொடங்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் உலக நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு தை…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வணக்கம் என தொடங்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் உலக நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு தை பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் இந்த திருவிழாவை அனைவரும் உற்சாகமாக கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

தமிழ் மருத்துவர்கள் பலர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டியுள்ளார். அதேபோல் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சிக்கும் தமிழர்கள் அதிக பங்காற்றியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ள அவர், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply