முக்கியச் செய்திகள் இந்தியா

“தமிழக சகோதர சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்” – பிரதமர் மோடி ட்வீட்

சித்திரை முதல் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் உள்ள இந்தியா, நேபாளம், மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவில், நேற்று கர்நாடக, மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலம், தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தங்கள் புத்தாண்டை கொண்டாடினர். இன்று தமிழ்நாடு, கேரள, அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர்.

தமிழ் புத்தாண்டிற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நேரந்திர மோடி, தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்து சகோதர சகோதரிகளுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும், புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் எனத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி நிறைக்க பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தமிழில் ட்வீட் செய்திருந்தார். அதில், “புத்தாண்டு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல்வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement:

Related posts

ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு!

Jeba

தேமுதிகவிற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு

Gayathri Venkatesan

தேர்தலுக்காக மமதா “ஜெய்ஸ்ரீராம்” என முழக்குவார்: – அமித்ஷா!

Niruban Chakkaaravarthi