முக்கியச் செய்திகள் இந்தியா

தேவேந்திர குலவேளாளர் சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

தேவேந்திர குலவேளாளர் சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

குடும்பன், பண்ணாடி, கல்லாடி, கடையன், பள்ளன், வாதிராயன் உள்ளிட்ட பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரின் கீழ் கொண்டுவரும் தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. கடந்த பிப்ரவரி 13ம் பட்டியலினத்தவர் பட்டியலில் மாற்றங்கள் செய்ய அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

அந்த மசோதா மீதான விவாதம் முடிந்து, கடந்த 19ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்த மசோதா கடந்த மார்ச் 22ம் தேதி மாநிலங்களவையில் விவாதத்துக்கு வந்தது. அப்போது மசோதாவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதையடுத்து, இதை சட்டமாக்க குடியரசுத்லைவர் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தையடுத்து, அது அரசிதழில் வெளிடப்பட்டு சட்டமாக அமலானது.

Advertisement:
SHARE

Related posts

“கட்சியின் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை”; அமைச்சர் ஜெயக்குமார்

Niruban Chakkaaravarthi

234 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

Halley karthi

ஸ்புட்னிக்-V தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்ட பிறகு தமிழகத்திற்கு வழங்கப்படும் : சுகாதாரத்துறை செயலாளர்

Halley karthi