பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காந்திநகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ராய்சன் என்ற இடத்தில் தனது இளைய மகன் பங்கஜ்…

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காந்திநகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ராய்சன் என்ற இடத்தில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார். பிரதமர் மோடியின் தாயார் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார். அன்றைய தினம் பிரதமர் மோடி தனது தாயாருக்கு பாத பூஜை செய்து வணங்கினார்.

இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குஜராத் மாநில சட்டச்சபை தேர்தலில் பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் இந்த தேர்தலின் போது பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வாக்குச்சாவடிக்கு நான்கு சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்து தனது வாக்கினை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.