பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு; முதலமைச்சர் உத்தரவு

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22-ம் தேதி தமிழக…

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22-ம் தேதி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும், பொங்கல் பண்டிகைக்கு கருப்பை அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி பயிரிட்டதாக விவசாகள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குவது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில நடைபெறறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.