பிரதமர் மோடியின் வாழ்க்கையை விவரிக்கும் அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு ஓராண்டு இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கையை விவரிக்கும் விதமாக பாஜக சார்பில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக ‘நான் செல்ல வேண்டும்’ (I Want to go) என்கிற தலைப்பில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
படிக்கட்டில், குஜராத் முதல்வர் என்கிற இடத்தில் இருந்து உயரமான இடத்தில் உள்ள பிரதமர் இருக்கையை நோக்கி மோடி நடந்து சொல்கிறார். அவர் தேநீர் விற்றவர், அமெரிக்காவில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது, 100 தலை ராவணன் உள்ளிட்ட விமர்சனங்களை காங்கிரஸ் சோனியா காந்தி உள்ளிட்டோர் முன்வைப்பது போல காட்டப்படுகிறது. அதையெல்லாம் கடந்து அவர் பிரதமர் இருக்கைக்கு சென்றவுடன், அமெரிக்கா அவரை தங்கள் நாட்டுக்கு அழைப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தூய்மை இந்தியா திட்டம், முத்ரா திட்டம், இலவச சிலிண்டர், ஜன்தன் கணக்கு, ஏழைகளுக்கு மானியத்தில் கோதுமை, பருப்பு வழங்கியது, விவசாயிகளுக்கு மானியம், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அதில் விளக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் ரஃபேல் விமானம் ஊழல் குற்றச்சாட்டு, பிபிசி ஆவணப்படம் போன்றவற்றையெல்லாம் கடந்து மோடி வெற்றிகரமாக பயணிப்பது போன்று அந்த வீடியோ நிறைவடைகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
मुझे चलते जाना है… pic.twitter.com/1NLvbV7L8y
— BJP (@BJP4India) March 14, 2023
-ம.பவித்ரா