பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வலியுறுத்தும் 5 உறுதிமொழிகள் என்ன?

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் தேசிய கொடியேற்றிய பின் உரையாற்றிய பிரதமர் மோடி, விடுதலைக்காக பாடுபாடுபட்ட சுதந்திரப்போராட்ட வீரர்களின் கனவுகள் நிறைவேற பொதுமக்கள் 5 உறுதிமொழிகளை மேற்கொள்ளக் கூறினார். அந்த 5 உறுதிமொழிகள்…

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் தேசிய கொடியேற்றிய பின் உரையாற்றிய பிரதமர் மோடி, விடுதலைக்காக பாடுபாடுபட்ட சுதந்திரப்போராட்ட வீரர்களின் கனவுகள் நிறைவேற பொதுமக்கள் 5 உறுதிமொழிகளை மேற்கொள்ளக் கூறினார். அந்த 5 உறுதிமொழிகள் என்னவென்று பார்ப்போம்

1) இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை 2047ம் ஆண்டு கொண்டாடும் முன்பு அடுத்த 25 ஆண்டுகளில், வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா நிச்சயம் இணைய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக அடுத்த 25 ஆண்டுகளை இளைஞர்கள் அர்ப்பணிக்க வேண்டும். ஒட்டுமொத்த மனித குலத்தின் வளர்ச்சிக்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

2)  காலனி ஆதிக்க காலத்தில் உருவாக்கப்பட்ட  அடிமைத்தன சிந்தனை மக்கள் மனதில்  துளியும் இருக்கக் கூடாது. மொழி கட்டுப்பாடுகளால் நம் திறமை சில நேரம்  குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்பட்டுவிடுகிறது. எனவே நாட்டின் ஒவ்வொரு மொழியையும் நினைத்து பெருமைப்பட வேண்டும். மற்றவர்கள் நம்மை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என எண்ணாமல், பெருமை மிகுந்த தேசத்தை சேர்ந்தவர்களாகவே நம் அடையாளத்தை நாம் எப்போதும் உணரவேண்டும்.

3) நமது பாரம்பரிய சிறப்புகளை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.நாம் நமது வேர்களாக விளங்கிய பாரம்பரியத்துடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்தால்தான் நம்மால் உயர பறக்க முடியும். உயர பறந்தால்தான் ஒட்டுமொத்த உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல முடியும்.

4) முதலிடத்தில் இந்தியா என்கிற தாரக மந்திரத்தை மனதில் வைத்து நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். நாட்டின் அனைத்து மக்களும் சமத்துவத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். பெண்களை மதிப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கான முக்கிய தூண்.

 

5) ஒரு குடிமகனாக மக்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். குடிமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து குடிநீர், மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். இதனால் எதிர்காலத்தில்  நல்ல பலன் கிடைக்கும். ஒரு குடிமகனுக்கு உரிய இந்த கடமை பிரதமர், முதலமைச்சர்கள் உ ள்பட அனைவருக்கும் பொருந்தும். நாட்டின் குடிமக்கள் அனைவரும் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட்டால் இந்தியா வேகமாக முன்னேறும்.

இவ்வாறு 5 உறுதி மொழிகளை சுட்டிக்காட்டி அதனை பொதுமக்கள் நிறைவேற்ற பிரதமர் மோடி தமது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.