பிரதமர் மோடி பயன்படுத்திய டொயோட்டா லேண்ட் குரூஸ்-க்கு பதிலாக, தற்போது ரூ.12 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 காரை பயன்படுத்துகிறார்.
கடந்த ஆண்டு, மெர்சிடிஸ் நிறுவனம் இந்த மேபெக் எஸ் 650 காரின் S600 மாடலை ₹ 10.5 கோடிக்கும், S650 மாடலை ₹ 12 கோடிக்கும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
பொதுவாக பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் மிகப் பாதுகாப்பான வாகனங்களையே பயன்படுத்த விரும்புவர். அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி மாற்றியுள்ள காரானது, பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. இந்த வகை கார்கள் ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்க்களின் தாக்குதலை தாங்கும் சக்தியை கொண்டதாகும். மேலும், விபத்து ஏற்பட்டால் தானாக பெர்ரோல் டாங்க் மூசிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இதேபோல், விஷ வாயு தாக்குதல் (Gas Attack) ஏற்பட்டால் காரில் சுவாசிக்க ஏதுவாக செயற்கை சுவாசக் கருவியும் இதில் உள்ளது.
சமீபத்தில் நடந்த மோடி- புதின் சந்திப்பின் போது பிரதமர் மோடி இந்த காரில் சென்றதாக தகவல் வெளியானது. இடதையடுத்து, மீண்டும் பிரதமர் மோடி பாதுகாப்பிற்காக சென்ற வாகனக் கான்வாயிலும் இந்த கார் காணப்பட்டட்து.
குஜராத் முதல்வராக இருந்தபோது, பிரதமர் மோடி மஹிந்திரா ஸ்கார்பியோவை பயன்படுத்தினார். 2014-ல் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அவர் BMW 7 சீரிஸ் உயர்-பாதுகாப்பு வாகனத்தை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.







