போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்த சம்பவம்; சிசிடிவி காட்சி வெளியீடு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வடமாநில தொழிலாளர்கள் காவல்துறையினரின் வாகனத்திற்கு தீ வைத்த வழக்கில் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நான்காயிரத்திருக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்களில் பணி…

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வடமாநில தொழிலாளர்கள் காவல்துறையினரின் வாகனத்திற்கு தீ வைத்த வழக்கில் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நான்காயிரத்திருக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிழக்கு அம்பலம் பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்பட்டுகிறது. அப்போது அவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மோதலை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினரைத் தாக்கியதோடு, அவர்களின் வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் இத்தாக்குதலில் காவல் ஆய்வாளர் உட்பட 5 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், திட்டமிட்டு கொலை முயற்சி போன்ற பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் 154 வட மாநில தொழிலாளர்களை கைது செய்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கும் தங்களது நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ள தனியார் நிறுவனம், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.