பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குறித்து பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குறித்து பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்வையொட்டி பிரதமர் மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்த நிகழ்ச்சியில், தேர்வு நேரத்தில் ஏற்படும் பயம், மன அழுத்தம், சோர்வு ஆகியவற்றை எப்படி எதிர்க்கொள்வது என்பதை குறித்து மோடி உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், இதில் பங்கேற்பதற்கான முன்பதிவு இன்று தொடங்கவுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் பிரதமர் மோடியுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். சிறப்பு வெற்றியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட அவர்களது புகைப்படங்கள் கிடைக்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் உண்டு.








