உத்தரபிரதேச வனத்துறையினர் பகிர்ந்துள்ள அரிய வகை வெள்ளை நிற மான்குட்டியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயற்கையில் படைப்பில் அழகான ஒரு உயிரினம் தான் மான்கள். பொதுவாக கவிஞர்கள் பெண்களை மானுடன் ஒப்பிட்டு வர்ணணை செய்வது உண்டு. மான்போன்ற விழிகள். மான் போன்று துள்ளி குதித்தோடும் பெண் என்று பெண்களை அதிகமாக மானுடன் ஒப்பிடுவர். அதிலும் திரைப்படங்களில் நிறைய பாடல்கள் வந்துள்ளன. மான்குட்டியே, புள்ளி மான்குட்டியே என்று பிரியமான தோழி படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெரும்பாலும் நாம் அனைவரும் சாதாரண புள்ளி மான் வகைகளை தான் பார்த்திருப்போம். ஆனால் வடஇந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள ஒரு அரியவகை மான் குட்டியானது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய வகை வெள்ளை மானின் படங்களை வனத்துறை அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து கூறிய அவர், கதர்னியாகாட் எனும் வனத்துறை பகுதியில் அரிதான வெள்ளை மான் குட்டி ஒன்றை பார்த்தோம். இது கற்பனையல்ல. நிஜமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வெள்ளை மானின் புகைப்படத்தை எடுத்த அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தற்போது இந்த மான் குட்டியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.