ப்ரொஃபைல் பிக்சராக தேசியக்கொடி – பிரமதர் மோடி வேண்டுகோள்

நாட்டு மக்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் ப்ரொஃபைல் பிக்சராக தேசியக் கொடியை 2 வாரங்களுக்கு வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதின்…

நாட்டு மக்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் ப்ரொஃபைல் பிக்சராக தேசியக் கொடியை 2 வாரங்களுக்கு வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம்.

அந்த வகையில் 91வது வாரமாக இன்று அவர் உரை நிகழ்த்தினார். அப்போது, நாடு சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டை அம்ருத மகோத்சவமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இது மிகப் பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ளதை பார்க்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெருமிதமும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க 75ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தைக் காண தான் ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்ற தனது வேண்டுகோளை மீண்டும் நினைவு கூர்ந்தார்.

அதோடு, நமது தேசியக் கொடியை உருவாக்கிய பிங்லி வெங்கைய்யாவின் பிறந்த தினம் ஆகஸ்ட் 2ம் தேதி என்பதால், அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அன்றைய தினத்தில் இருந்து சுதந்திர தினம் கொண்டாட உள்ள ஆகஸ்ட் 15ம் தேதி வரை நாட்டு மக்கள் தங்களின் சமூக பக்கங்களில் ப்ரொஃபைல் பிக்சராக தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அடுத்த மனதின் குரல் நிகழ்ச்சிக்கு முன்பாக நாம் நமது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி இருப்போம் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஏதோ ஒரு வகையில் கூடுதல் சிறப்புடன் கொண்டாடியவர்கள் அது குறித்து தனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.