இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்விற்கான ஆலோசனைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் நாட்டு மக்களுடன் மனதின் குரல் என்ற தலைப்பின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இம்மாதம் 30-ஆம் தேதி இந்த ஆண்டின் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்விற்கான ஆலோசனைகளையும் கருத்துகளையும் @mygovindia அல்லது நமோ செயலியில் பகிருங்கள். 1800-11-7800 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் உங்களின் தகவலை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.







