முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

“காலநிலை மாற்றத்தைத் தடுக்க தனித்துவத்துடன் செயல்படுகிறோம்”

காலநிலை மாற்றத்தைத் தடுக்க இந்தியா தனித்துவத்துடன் செயல்படுகிறது என்று ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பூமிக்கு அடியில் இருந்து பெறப்படும் வளங்களைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதை இந்தியா 9 ஆண்டுகளுக்கு முன்பே 40 சதவீதம் வரை குறைத்துவிட்டது என குறிப்பிட்டார்.

இதேபோல், பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலப்பதற்கான காலக்கெடுவுக்கு 5 மாதங்களுக்கு முன்பாகவே, இந்தியா இலக்கை எட்டிவிட்டது என்றும் அவர் தெரிவி்த்தார்.

முழுமையாக சூரிய சக்தி மின்சாரத்தைக் கொண்டு இந்தியா விமான நிலையத்தை இயக்கி வருகிறது என கூறிய பிரதமர் நரேந்திர மோடி, 2030க்குள் அனைத்து ரயில் நிலையங்களையும் இவ்வாறு இயக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தூய மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் வளர்ந்து வருவதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த தொழில்நுட்பங்களில் வளர்ந்த நாடுகள் அதிக முதலீடுகளை செய்து இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தூய்மையான மின்சாரத்தை தயாரிப்பதற்கான ஆராய்ச்சி, புதுமை, உற்பத்தி ஆகியவற்றில் வளர்ந்த நாடுகள் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்களை கட்டுபடியான விலையில் உலகிற்கு வழங்க இந்தியா உறுதிபூண்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்தியர்கள் ஒவ்வொருவரின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் இருக்கிறது என்றார்.

பூமிக்கு ஆதரவாக மக்கள்(pro planet people) என்பதை இயக்கமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, இத்தகைய மக்களை உருவாக்குவதே வருங்கால தலைமுறையினருக்கான மிகச் சிறந்த பங்களிப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தோல்வி சாதாரணமான ஒன்று – அமைச்சர்

Web Editor

அடக் கொடுமையே.. முன்னாள் காதலியை பார்க்கச் சென்றவருக்கு இப்படி ஒரு சிக்கல்!

Gayathri Venkatesan

“படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும்”: சரோஜா

Halley Karthik