இ-ரூபி வசதியை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி

இ-ரூபி எனும் ரசீது முறை பணப் பரிமாற்ற வசதியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பணப்பரிவர்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இ-ரூபி எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் இணையம் மூலம் முன்கூட்டியே பணம் செலுத்திவிட்டால்…

இ-ரூபி எனும் ரசீது முறை பணப் பரிமாற்ற வசதியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

பணப்பரிவர்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இ-ரூபி எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் இணையம் மூலம் முன்கூட்டியே பணம் செலுத்திவிட்டால் அவர்களுக்கு இதுதொடர்பான தகவல் மின்னணு ரசீது, குறுஞ்செய்தியாகவோ அல்லது   வாங்கிக் கொள்ளளாம். பின்னர் பணம் செலுத்த வேண்டிய இடத்தில் ரசீது அல்லது க்யூஆர் கோடாக அனுப்பப்படும். அந்த ரசீதில் உள்ள விவரங்களை பணம் செலுத்த வேண்டிய இடத்தில் தெரிவித்தால் மட்டும் போதுமானது. பணம் அதிலிருது பிடித்துக்கொள்ளப்படும்.

இதன் மூலம், ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் இல்லாமல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை, நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது பேசிய பிரதமர், டிஜிட்டல் நிர்வாகத்தில் இந்தியா புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.