பீகார் | நாளந்தா பல்கலை. புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

பீகார் மாநிலத்தில் ரூ.1,749 கோடியில் உருவாக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். பீகாரில் கடந்த 5ம் நூற்றாண்டில் சர்வதேச நாட்டு அறிஞர்களின் பங்களிப்புகளோடு உருவாக்கப்பட்டது நாளாந்த…

பீகார் மாநிலத்தில் ரூ.1,749 கோடியில் உருவாக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

பீகாரில் கடந்த 5ம் நூற்றாண்டில் சர்வதேச நாட்டு அறிஞர்களின் பங்களிப்புகளோடு உருவாக்கப்பட்டது நாளாந்த பல்கலைகழகம்.  சிறப்பாக செயல்பட்ட நாளாந்தா பல்கலைக்கழகம் 12 ஆம் நூற்றாண்டில் அழிந்தது.  பழமையான இந்த நாளாந்தா பல்கலைக்கழகம் தற்போது புதியதாக கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது.  ரூ.1749 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பல்கலைக்கழகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இவ்விழாவில் பீகார் ஆளுநர் ராஜேந்திர வி. அர்லேகர்,  முதலமைச்சர் நிதீஷ் குமார், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “ நமது கல்வித் துறைக்கு இது மிகவும் சிறப்பான நாள்.  நாளந்தா பல்கலைக்கழகம் நமது புகழ்பெற்ற கடந்த காலத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது.  இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் நிச்சயமாக நீண்ட தூரம் செல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.