குஜராத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை குறிக்கும் வகையில் தங்கநகை நிறுவனம் ஒன்று 156 கிராம் எடையில் பிரதமர் மோடியின் சிலையை உருவாக்கியுள்ளது.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வெற்றியை குறிக்கும்வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு நகை தயாரிப்பு நிறுவனம், 18 கேரட் தங்கத்தில் 156 கிராம் எடையுள்ள பிரதமர் மோடியின் மார்பளவு சிலையை உருவாக்கி உள்ளது. கடந்த மாதமே சிலை தயாராகி விட்டது. ஆனால், எடை 156 கிராமுக்கு மேல் இருந்தது. பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அதற்காக சில மாறுதல்கள் செய்து எடையை 156 கிராமாக குறைத்துள்ளனர்.
இந்த தங்க சிலையை 20 பொற்கொல்லர்கள் சேர்ந்து 3 மாதங்களாக பாடுபட்டு இந்த சிலையை உருவாக்கி உள்ளனர். ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இச்சிலை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விலைக்கு வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர்.
இருப்பினும், விற்பது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் வசந்த் போரா இன்னும் முடிவு செய்யவில்லை. இவர் ஏற்கனவே குஜராத்தில் உள்ள பிரமாண்டமான படேல் சிலையின் மாதிரி வடிவத்தை தங்கத்தில் தயாரித்து விற்பனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.