முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

விபத்தில் காயமடைந்த பிரபல நடிகருக்கு எலும்பு முறிவு

விபத்தில் சிக்கிய சிரஞ்சீவியின் உறவினரான நடிகர் சாய் தரம் தேஜுக்கு தோள் பட்டை யில் எலும்பு முறிவு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ். இவர், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனான இவர் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்தவர். ரே, சுப்ரமணியம் ஃபார் சேல், ஜவான், தேஜ் ஐ லவ் யூ உள்படல சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்காவின் மகன்.

சாய் தரம் தேஜ், ஐதராபாத்தில் மாதாப்பூர் பகுதியில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்வாங்கி ஸ்போர்ட்ஸ் பைக்கில் நேற்று இரவு சென்றார். திடீரென, அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சாய் தரம் சுய நினைவின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதையறிந்த நடிகர் சிரஞ்சீவி, அவர் மனைவி, பவன் கல்யாண் உள்பட அவர் குடும்பத்தினர் மருத்துவமனையில் குவிந்தனர். இந்த விபத்து அவர்கள் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சரண் தேஜுக்கு தோள்பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவர் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது…முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு

Nandhakumar

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருவருக்கு கொரோனா: இன்றை ஆட்டம் ஒத்திவைப்பு!

Halley karthi

பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்? : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Saravana