தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில வாரங்களாக 30க்குள்ளாகவே பாதிப்பு பதிவாகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், டெல்லி, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் திடீரென கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளன, தமிழகத்தில் தற்போது தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 230 மட்டுமே. ஆகவே, தடுப்பூசி, மாஸ்க் போடுவது, தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த சில நாட்களாக இறப்பு விகிதம் குறைந்த நிலையில் மக்கள் தடுப்பூசி போட்டுகொள்வதை நிறுத்தி விட்டனர், நேற்று வெறும் 4,000 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். முதியோர்களில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் முதல் தவணை தடுப்பூசியே போட்டுக்கொள்ள வில்லை என்று சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன், தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினார்.
வெயில், தாக்கம் அதிகமாக உள்ளதால், வெளியில் செல்பவர்கள் நேரடி வெயில் படுவதை தவிர்க்க வேண்டும், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.தமிழகத்தில் இதுவரை XE பதிவாகவில்லை என்றும் விளக்கினார்.