இந்திய புராணங்களில் ஒன்றான ராமாயணத்தை வைத்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் தற்போது இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா என்னும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ராமராக ரன்பீர் கப்பூர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் வெளியான இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ ரசிகர்களை கவர்ந்தது. மேலும் ராமாயணா திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகை சாய் பல்லவி கூறியதாவது: இப்படைப்பிற்காக படக்குழுவினர் 10 ஆண்டுகளாக கடினமாக உழைத்தனர். நானும் 3 ஆண்டுகள் பணியாற்றினேன். சீதையாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம் . எதிர்கால சந்ததியினருக்கான ஒரு காவியமாக இப்படம் உருவாகியுள்ளது . சீதையின் பண்புகளைத் திரையில் பிரதிபலிக்கவே நான் இந்த படத்தில் நடித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.




