பூமி வெப்பமடைவதைத் தடுக்க 10 ஆண்டுகளில் 260 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தரமணி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் கலைக்கழகத்தில்
சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென் சென்னை
முகேஷ் கண்ணன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தில் 4500 மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், யார் எதிர்காலத்தில் மரங்களைப் பாதுகாக்க வேண்டுமோ அவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியைத் துவக்கி வைப்பது பெருமையாக இருக்கிறது.
ஒரு நாட்டின் பசுமை தரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் நம்மிடம் 23.7% மட்டுமே உள்ளது. 9.3% கூடுதலாக மரம் நட வேண்டும். அதற்கு 260 கோடி மரங்கள் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளில் 260 கோடி மரங்களை நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்துள்ளார் என பேசினார்.

இந்த திட்டத்தினை தமிழக அரசு கையில் எடுத்திருந்தாலும் கூட இது அரசினால்
மட்டுமே சாத்தியப்படாது. ஒவ்வொரு பொது மக்களும் இதனை கையில் எடுத்து
எதிர்காலத்தில் நமக்கு வாழ்வு அளித்து கொண்டிருக்கக்கூடிய மண்ணை மலடாக்காமல்
பாதுகாப்பது நம்முடைய கடமை. எனவே ஆளுக்கு ஒரு மரங்களை நட வேண்டும் என அவர் பேசினார்.







