பெட்ரோலுக்கு இணையாக எத்தனாலை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள் ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பெட்ரோலுக்கு இணையாக எத்தனாலிலும் கலோரிக் மதிப்பை அதிகரிக்கும் தொழில் நுட்பம் ரஷ்யாவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து அந்த தொழில் நுட்பத்தை இங்கு கொண்டுவந்துள்ளதாகவும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகரில் 3 தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய அரசு அனுமதி அளித்தால், இந்தியாவில் அதே தொழில்நுட்பத்தை செயல்படுத்த திட்டமிட்டுள் ளதாகவும் சொன்னார்.
மேலும், நாட்டுக்கு அன்னமிடும் விவசாயிகளை எரிசக்தி உற்பத்தியாளர்களாக மாற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் பிரச்னை இன்றி வாழ வேண்டுமானால், நாட்டில் எத்தினால், பயோ சிஎன்ஜி, மின்சார வாகனங்களை தயாரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
விவசாயிகள் உணவுதானியங்களை உற்பத்தி மட்டும் செய்வதால் பயனில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.








