தமிழக அரசின் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் 2030ம் ஆண்டிற்குள் 261 கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து 24 சதவீதம் உள்ள வனப்பரப்பை 33 சதவீதமாக மாற்றப்படும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் ஊராட்சியில் உள்ள நாற்றங்கால் பண்ணையில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் ஒன்றிய குழு பெருந்தலைவர் சரஸ்வதி, சென்னை மண்டல
தலைமை தலைமை வன பாதுகாவலர் கீதாஞ்சலி மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி
மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆய்விற்கு பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர்
ராமச்சந்திரன், தமிழகம் முழுவதும் உள்ள ஒருலட்சத்து 30ஆயிரம் ஹெக்டர் சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பில் ஏற்கனவே 24 சதவீதமாக உள்ள வனப்பரப்பை 33 சதவீதமாக மாற்றும் வகையில் பசுமை தமிழகம் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி 2.60 கோடி மரக்கன்றுகள் 2023 மார்ச் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் நடப்பட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.
மேலும் ஆண்டுக்கு 32 கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்து 2030க்குள் 261 கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயல்படவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார்.
இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் வனத்துறை மட்டுமல்லாமல் தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடனும் தமிழ்நாடு கிரீன் கிளைமேட் நிறுவனத்தை ஆரம்பித்து அதன் தலைவராக முதல்வர் உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதை ஆய்வு செய்து குறைபாடுகளை அதிகாரிகளுக்கு சுட்டி காட்டி இந்த திட்டத்தை செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வனத்துறை அதிகாரிகளுக்கு கூறியதாக தெரிவித்தார்.