முக்கியச் செய்திகள் தமிழகம்

கிளாம்பாக்கத்தில் ஆகாய நடைபாதையுடன் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம்

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை ரயில் நிலையத்துடன் இணைக்க ஆகாய நடைபாதை அமைக்க சென்னை போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.

சென்னை: கிளாம்பாக்கத்தில் திறக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்குப் பயணிகள் வந்து செல்ல வசதியாக கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வேயிடம் சென்னை போக்குவரத்து குழுமம் அனுமதி கோரியுள்ளது.
ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் பேருந்து நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள ரயில் நிலையத்தையும் ஆகாய நடைபாதை மூலமாக இணைக்க சென்னை போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என்று 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உள்ளது. இந்த பேருந்து நிலையம் வரும் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பிறகு கோயம்பேட்டிலிருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தற்போது சாலை வழியாக மட்டுமே செல்ல முடியும். மின்சார ரயில் கிளாம்பாக்கத்தில் இல்லை. பண்டிகை காலங்களில் அனைவரும் சாலை வழியாக வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்ப உள்ளது. எனவே இதை தடுக்க கிளாம்பாக்கத்தில் ஒரு புறநகர் ரயில் நிலையம் அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி அளிக்க கோரி தெற்கு ரயில்வே இடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அப்படி தெற்கு ரயில்வே அனுமதி அளிக்கும் பட்சத்தில் ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூருக்கு இடையே கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையமும் அமைக்கப்பட உள்ளது.

இங்கு பயணிகள் சாலை வழியாக நடந்து செல்வதை தவிர்க்க, ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு ஒரு ஆகாய நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 400 மீ நீளத்திற்கு இந்த நடைபாதை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்படவுள்ளது.

  • தாமரைக்கனி, செய்தியாளர் 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விக்ரம்: திரைவிமர்சனம்

EZHILARASAN D

தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த முதல்வர்!

நேதாஜி நினைவு தினம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ட்வீட்-பார்வர்டு பிளாக் எதிர்ப்பு

Web Editor