தண்டவாளத்தில் போட்டோ ஷூட் – திடீரென வந்த ரயிலால் 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி!

90 அடி உயரத்தில் உள்ள பழமைவாய்ந்த தண்டவாளத்தில் நின்று போட்டோஷூட் எடுத்த தம்பதி ரயில் வந்ததும் பள்ளத்தில் குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.  ராஜஸ்தான் மாநிலம் பாக்டி நகரில் உள்ள காலால் கி பிபாலியான்…

90 அடி உயரத்தில் உள்ள பழமைவாய்ந்த தண்டவாளத்தில் நின்று போட்டோஷூட் எடுத்த தம்பதி ரயில் வந்ததும் பள்ளத்தில் குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலம் பாக்டி நகரில் உள்ள காலால் கி பிபாலியான் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ராகுல் (22) – ஜான்வி (20). சமீபத்தில் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது . இதனால் ராஜஸ்தானில் உள்ள பாலியில் போட்டோஷூட் எடுக்க திட்டமிட்டிருந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் 90 அடி உயரத்தில் உள்ள பழமையான ரயில் மேம்பாலத்தில் புகைப்படம் எடுக்க முடிவு செய்தனர். அதேபோல அந்த ரயில் மேம்பால தண்டவாளத்தில் ராகுல் – ஜான்வி தம்பதி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் திடீரென ரயில் வந்தது. ரயிலை பார்த்த ராகுல் – ஜான்வி தம்பதியால் உடனடியாக அங்கிருந்து ஓடிவர முடியவில்லை. அதே சமயம் ரயில் மோதினால் உயிர் பிழைப்பது கடினம் என்பதால், அவர்கள் ஒன்றாக பாலத்திலிருந்து 90 அடி பள்ளத்தில் குதித்தனர்.

இதில், படுகாயமடைந்த அந்த தம்பதியினரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 பேரின் உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.