தமிழ்நாட்டில் 100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை

பெட்ரோல் மீதான மாநில வரி விதிப்பில் இருந்து ரூ.3 குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் குறைந்து விற்பனையாகிறது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு…

பெட்ரோல் மீதான மாநில வரி விதிப்பில் இருந்து ரூ.3 குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் குறைந்து விற்பனையாகிறது. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலைகள் கண்ணுக்குத் தெரியாதவகையில் சிறு காசுகளாக உயர்ந்து விலை ரூ.100-ஐ தாண்டியது. நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.49க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

இந்நிலையில், நேற்று சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். அதில் பெட்ரோல் மீது மாநில அரசின் வரி விதிப்பில் இருந்து ரூ. 3 குறைக்கப்படுவதாக அறிவித்தார். அதற்கான அரசாணையும் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதையடுத்து பெட்ரோல் மீதான ரூ.3 வரிகுறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.47க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.94.39க்கு விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.