பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு சர்வதேச விலைக்கு ஏற்ப உயர்வு அடைவதாகவும், விரைவில் விலை குறையும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
பாஜக சார்பில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு 100 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், பாஜக அரசியல் கட்சி மட்டும் அல்ல சேவை இயக்கமாக செயல்பட்டு வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்வதற்கு எந்த முயற்சியும் எடுத்தது போல் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் பொறுத்தவரை கூட்டணி குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்வோம். திமுக கூட்டணியில் விசிக உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு விவகாரத்தில் திமுகவை எதிர்த்து விசிக ஆர்ப்பாட்டம் செய்கிறது என்று குறிப்பிட்ட எல்.முருகன், நீட் தேர்வு விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது என அவர்களுக்கு தெரியும். நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக காங்கிரஸ் கட்சிகள் தான் என குற்றம்சாட்டினார்.
பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு சர்வதேச விலைக்கு ஏற்ப உயர்வு அடைவதாகவும், விரைவில் விலை குறையும் என எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.







