முக்கியச் செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய ரோஜர் பெடரர்

லண்டனில் நடந்து வரும் 2021 விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் உலகின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர்
3 வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

இந்நிலையில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்சின் ரிச்சர்ட்டு காஸ்குட்டை ரோஜர் பெடரர் எதிர்கொண்டார். சுமார் 2 மணி நீடித்த இந்த ஆட்டத்தில், 7-6, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் பெடரர் வெற்றிபெற்றார்.
டென்னிஸ் ஜாம்பவான் மற்றும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் முதல் செர்வில் (first serve) ஆட்டத்தை தனதாக்கினார். 8 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் பெடரர், இதுவரை 50 சாம்பியன்களை தோற்கடித்துள்ளார். பிரான்ஸின் ரிச்சர்ட்டு காஸ்குட் 20 சாம்பியன்களை தோற்கடித்துள்ளார்.

39 வயதாகும் ரோஜர் பெடரர் உலக டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளார். நேற்று நடந்த ஆட்டத்தில் இவர் 26 தவறுகள் செய்தார். இருந்தாலும் இந்த தவறுகளை ரிச்சர்ட்டு காஸ்குட் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதனால் ரோஜர் பெடரர் வெற்றியை எளிதாக தன்வசமாக்கினார். இதன்மூலம் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ரோஜர் பெடரருக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதனால் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இவர் வெற்றியை சுவைக்கவில்லை. இதனால் இந்த முறை வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகிறார்.

Advertisement:
SHARE

Related posts

ஹோலி கொண்டாட்டம்: சன்னி லியோனின் வைரல் புகைப்படங்கள்

Jeba Arul Robinson

“வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: முதல்வர் பழனிசாமி

Halley Karthik

சசிகுமார் படத்துக்கு ‘அயோத்தி’ என்ற டைட்டில் ஏன்?

Halley Karthik