முக்கியச் செய்திகள் சினிமா

பெருந்தலைவர் காமராஜ் 2 ட்ரைய்லர் வெளியீடு !

பெருந்தலைவர் காமராஜ் 2 படத்தின் ட்ரையிலர் அவரது பிறந்த நாளில் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பெருமைமிகு வரலாற்று தலைவர், முன்னாள் முதல்வர், மக்கள் மனங்களில் என்றென்றும் குடியிருக்கும் பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கையை வெள்ளித்திரையில் கொண்டு வந்த திரைப்படம் தான் “பெருந்தலைவர் காமராஜ்”. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான “பெருந்தலைவர் காமராஜ் 2 ” தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் & புத்தக வெளியீட்டு விழா முன்னணி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. ரமணா கம்யூனிகேஷன் சார்பில் இப்படத்தினை இயக்குநர் AJ பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவ்விழாவில் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, நான் ஆரம்ப காலத்தில் பள்ளிகள் குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க ஆசைப்பட்டேன். அப்போது ஒரு பொட்டல்காட்டு பள்ளிக்கூடம் பற்றி அதை கட்ட சொன்னது யார் என்பது பற்றி எடுக்க ஆசைப்பட்டேன் எத்தனை முயன்றும் முடியவில்லை. அந்த பொட்டல் காட்டில் பள்ளிக்கூடம் கட்டியவர் கர்மவீரர் காமராஜர். ஒரு படம் எடுத்தால் அதன் ஊழல் வெளிவந்தது விடும் என எடுக்க விடவில்லை. தன் வாழ்நாள் முழுதும் உண்மையை கடைபிடித்தவர். அவரின் பிறந்த நாளில் அவரின் நினைவை போற்றும் விழாவில் பங்கு கொள்வது எனக்கு வாழ்நாள் பாக்கியம் அனைவருக்கும் என் நன்றிகள் என்று கூறினார்.

இயக்குநர் AJ பாலகிருஷ்ணன் பேசுகையில், காமராஜர் பற்றி முதன் முதலில் புத்தகம் மூலம் அறிந்த போது ஆச்சர்யமாக இருந்தது. அவருக்கு ஜாதி, மதம், இல்லை. அவர் சாதனைகளுக்கு எல்லையில்லை. அவரும் காந்தியும் ஒரே மாதிரி தான். அவர் செய்த சாதனைகளை நான் படம் பிடிக்கிறேன் அவ்வளவு தான். காமராஜர் சாதனைகள் உலகுக்கு தெரிய வேண்டும். இந்தப்படம் அதைச் செய்யும் என்று கூறினார்.

காமராஜராக நடித்து வரும் பிரதீப் மதுரம் பேசுகையில், பாலா சார் காமராஜர் சீரியல் எடுக்க முனைந்த போது அப்பாவை பார்த்து அப்படியே கூட்டி வந்து நடிக்க வைத்தார்கள். 2004 ல் வெளிவந்த படம் என் அப்பா நடித்தது தான். 2005 ல் எதிர்பாரா விதமாக அப்பா தவறிவிட்டார். 2015 ல் அப்படத்தை டிஜிட்டலாக மாற்ற நினைத்த போது ஒரு சில காட்சிகள் எடுக்க வேண்டுமென நீ அப்பா போலவே இருக்கிறார் என என்னை நடிக்க வைத்தார்கள். முதலில் நான் மறுத்தேன். ஆனால் கட்டாயப்படுத்தியே நடிக்க வைத்தார்கள். அந்தக்காட்சியில் நடித்த போது எனக்குள் என்னென்னவோ மாற்றங்கள். இந்த காலத்தில் இருப்பவர்களுக்கும் காமராஜரை அறிமுகப்படுத்த வேண்டுமென்கிற உங்களின் முனைப்பை நான் பாராட்டுகிறேன் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் பதில்!

EZHILARASAN D

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை

Jeba Arul Robinson

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நலம்பெற விழைகிறேன் – ஸ்டாலின் ட்வீட்

Web Editor