முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை மெரினா கடற்கரையில், கருணாநிதியின் நினைவிடம் அமைக்க நிபந்தனைகளுடன் அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்க சில நிபந்தனைகளுடன் மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவ்விடத்தில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனையடுத்து 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், தற்போது அந்த இடத்தில் நினைவிடம் அமைப்பதற்காக சில நிபந்தனைகளுடன் மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

முதற்கட்டமாக ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட 160 சென்ட் பரப்பரளவில் 2 பெவிலியன், 2 கேலரிகள், 4 நீர்குளங்கள், கியாஸ் பம்ப் அறை, கழிப்பறை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. அதில், உள்ளாட்சி அமைப்புகளிடம் பெற வேண்டிய முன் அனுமதிகளை முறையாக பெற்றிருக்க வேண்டும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும், மண்ணிற்கு ஏற்ற செடி, கொடி, மரங்களை நட்டு பசுமை பரப்பு உண்டாக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அடங்கியுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் உயிரிழந்த (BPL) குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம்: கர்நாடக அரசு

நூற்றுக்கணக்கான சாதனைகளை அதிமுக அரசு செய்துள்ளது: முதல்வர் பழனிசாமி

Halley Karthik

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை; வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

Saravana Kumar