22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விரைவில் அனுமதி கிடைக்கும் -அமைச்சர் சக்கரபாணி

விவசாயிகளிடமிருந்து 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என உணவு திருவிழாவை தொடங்கி வைத்த பின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உணவு…

விவசாயிகளிடமிருந்து 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என உணவு திருவிழாவை தொடங்கி வைத்த பின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் சார்பில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில், உலக உணவு நாள் 2022-ஐ கொண்டாடும் வகையில் உணவுத் திருவிழா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த உணவுத் திருவிழாவை அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் சேகர் பாபு தொடங்கி வைத்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, ‘பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு பல நடவடிக்கையை எடுத்து வருகிறது. திமுக ஆட்சி அமைத்த பிறகு மட்டும் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 13 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், ‘சாலையோர வியாபாரிகளை கவுரவிக்கும் விதமாக இந்த உணவுத்திருவிழா நடைபெறுகிறது என்றும் 22% நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று வருகை தந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அனுமதி கிடைக்கும் என நம்பிகிறோம். அரசு உறுதியாக 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தயாராக இருக்கிறது என்றார்.

அத்துடன், ‘நெல் கொள்முதலுக்கு 103 இடங்களில் திறந்தவெளி கிடங்கு உள்ளது.அவை இனி இருக்க கூடாது என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.பல்வேறு இடங்களில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகிறது. நவம்பர் 15ம் தேதிக்குள் அவை கட்டி முடிக்கப்படும் என்றும் இனி 11 லட்சம் மெட்ரின் டன் சேமித்து வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்யும் நெல்லை சேமித்து வைக்காமல் நேரடியாக இனி தனியார் அறுவை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் 13 ஆலைகள் சுமார் 6700 மெட்ரின் டன் தனியார் பங்களிப்புடன் நிறுவ உள்ளோம். விரைவில் அதற்கான டெண்டர் கோரப்பட உள்ளது. மேலும் இதுவரையில் 1177 நியாயவிலைக் கடைகள் மாதிரி ரேஷன் கடைகளாக மாற்றப்பட்டுள்ளது’ என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.