இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 47 கோயில்களில் உழவாரப் பணிகளை பக்தர்கள் விரும்புகின்ற நாள், நேரத்தில் மேற்கொள்ள இ-சேவை மூலம் பதிவு செய்யலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோயில்களில் பக்தர்கள் விரும்பும் நேரத்தில் உழவாரப் பணிகள் மேற்கொள்வதற்காக இ-சேவை முறையில் பதிவு செய்யும் வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 47 கோயில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள இருக்கும் பக்தர்கள், தாங்கள் விரும்பும் நேரத்தை இ-சேவை மூலம் பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ரூ. 600 கோடி ரூபாய் மதிப்பிலான 100 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரம் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவைகளில் முதற்கட்டமாக 170 கோயில்களில் குடமுழுக்கு நடத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







