முக்கியச் செய்திகள் இந்தியா

’நிலத்தடி நீர் எடுப்பதற்காக அனுமதி பெற வேண்டும்’ – மத்திய நிலத்தடி நீர் ஆணையம்

மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (CGWA) ஜல் சக்தி அமைச்சகம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீச்சல் குளம் / சுரங்க திட்டங்கள் / உள்கட்டமைப்பு / இண்டஸ்ட்ரியல் / மொத்த தண்ணீர் சப்ளையர்கள் / நகர்ப்புற பகுதிகளில் அரசு தண்ணீர் சப்ளை ஏஜன்சிகள் / குருப் ஹவுசிங் சொசைட்டிகள் / குடியிருப்பு உள்பட எல்லா நிலத்தடி நீர் பயன்படுத்துவோர்கள் கவனத்திற்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அந்த பொது அறிவிப்பில், தற்போதுள்ள அல்லது புதிய மேற்கண்ட எல்லா நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்கள் 30.06.2022 குள் CGWA லிருந்து நிலத்தடி நீர் எடுப்பதற்காக அனுமதி பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘‘விஷமுள்ள காய்கறிகளைத் தான் நாம் அதிகம் சாப்பிடுகிறோம்’ – நடிகர் மன்சூர் அலிகான்

மேலும், 30.09.2022க்குள் பூர்த்தி அடைந்த விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்காக ரூ.10,000 பதிவு கட்டணத்தைச் செலுத்துவதின் பேரில் 30.06.2022க்குள் தங்களது நிலத்தடி நீர் எடுப்பதைப் பதிவு செய்வதற்கு இதன் மூலம் எல்லா தற்போதைய பயன்பாட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. CGWA லிருந்து NOC பெறாமல் நிலத்தடி நீரைத் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் இத்தகைய நிலத்தடி நீர் எடுத்தல் சட்டத்திற்குப் புறம்பாகக் கருதப்படும் எனவும், மேலும் விவரங்களைத் தெரிந்துள்ள https://cgwa-noc.gov.in பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்-அமைச்சர் பதில்

Web Editor

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

பிரதமருடன் இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு

G SaravanaKumar